search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை வசதி"

    • பட்டணம்காத்தானில் தொடக்க பள்ளிக்கு வகுப்பறை வசதி கேட்டு பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போதிய இட வசதியின்றி மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்திநகரில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 126 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலக கோப்புகள், கீழே ஆங்கில வகுப்பறைகளில் வினாத்தாள் வைக்க பயன்படுத்துகின்றனர். இதனால் போதிய இட வசதியின்றி மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

    இதனை கண்டித்து நேற்று பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக நுழைவு வாயிலை மறித்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி வளாகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை. 126 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் உள்ளனர். வகுப்பறைகளை கோப்புகள் வைக்கவும், கல்வி அதிகாரிகள் அலுவலகமாக பயன்படுத்துகின்றனர்.

    மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிப்பதால் வெயில், மழை மற்றும் காய்ச்சல், வயிற்றுபோக்கால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கல்வி அதிகாரிகள் அலுவலகம், கோப்புகள், வினாத்தாள்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பெற்றோருடன் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,(பொ) மரகதநாதன், தாசில்தார் முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முதல் தளத்தில் உள்ள கல்வி அலுவலகத்தை காலி செய்யவும், கூட்ட அரங்கில் வகுப்பறை நடத்த ஏற்பாடு செய்யப்படும், எனக்கூறினர். இதில் சமரசம் அடைந்த பெற்றோர் வகுப்பறை வசதி செய்து தராவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.

    ×